வங்கிகளில் ரூ.10,000 வரையான ஆன் லைன் பண பரிமாற்றத்துக்கு(இடிரான்ஸ்பர்) கட்டணம் ரூ.5ல் இருந்து ரூ.2.50 ஆக குறைக்கப்பட்டுள்ளது. வங்கிகளில் பண பரிமாற்றங்களுக்கு காசோலைகள் பயன்படுத்துவதால் ஏற்படும் செலவுகள் அதிகமாக உள்ளதால், காசோலை பயன்பாட்டை முழுமையாக கைவிட வேண்டுமென நிதியமைச்சராக பிரணாப் இருந்த போது கூறியிருந்தார். ஆன்லைன் பண பரிமாற்றத்துக்கு கட்டணம் எதுவும் வசூலிக்கக் கூடாது என்றும் ரிசர்வ் வங்கியிடம் கோரியிருந்தார்.
தற்போது ஒரு வங்கி கணக்கில் இருந்து, இன்னொரு கணக்குக்கு ரூ.1 லட்சம் வரை ஆன்லைனில் பண பரிமாற்றம் செய்வதற்கு ரூ.5 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில், ரூ.10 ஆயிரம் வரை பண பரிமாற்றம் செய்வதற்கு ரூ.2.50 காசுகளாக குறைத்து ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இது பற்றி, ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பு வருமாறு: காசோலை செயல்பாட்டை குறைத்து, ஆன்லைன் பண பரிமாற்றங்களை அதிகரிப்பதற்கு வாடிக்கையாளர்களை ஊக்குவிக்க வேண்டும். எனவே, ரூ.10 ஆயிரம் வரை ஆன்லைன் பண பரிமாற்றத்துக்கு அதிகபட்சமாக ரூ.2.50 மட்டுமே கட்டணம் வசூலிக்க வங்கிகளுக்கு உத்தரவிடப்படுகிறது. இதன்மூலம், ஏராளமான வாடிக்கையாளர்கள் ஆன்லைன் பண பரிமாற்றத்துக்கு மாறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. எனினும், ரூ.10 ஆயிரத்துக்கு மேல் ரூ.1 லட்சம் வரையான ஆன்லைன் பண பரிமாற்றத்துக்கு ரூ.5ம், ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை ஆன்லைன் பண பரிமாற்றத்துக்கு அதிகபட்சம் ரூ.15ம் கட்டணமாக வசூலிக்கலாம் என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...