குரூப் - 1 முக்கியத் தேர்வு எழுதுபவர்களுக்கு, டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும், 10 மையங்களில் குரூப் 1 பணிக்கான முக்கியத் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
துணை கலெக்டர், டி.எஸ்.பி., உள்ளிட்ட, குரூப்௧ நிலையிலான பணிகளில், 131 காலிப் பணியிடங்களை நிரப்ப, கடந்த ஆண்டு, ஜூன் 5ம் தேதி, முதல் நிலைத் தேர்வு நடந்தது. இதன் முடிவில், 2,795 பேர், முக்கியத் தேர்வுக்கு தகுதி பெற்றனர்.
இதைத் தொடர்ந்து, முக்கியத் தேர்வு, 28, 29 ஆகிய தேதிகளில் நடக்கிறது. சென்னையில் மட்டும், 10 மையங்களில், இந்தத் தேர்வு நடக்கிறது. ஒவ்வொரு பணியிடத்திற்கான தேர்வும், இரு தாள்களாக நடக்கிறது.
பொது அறிவுத் தாள்களாக, தலா 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்படுகிறது. 2,795 பேருக்கும், தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.tn.gov.in) நேற்று, ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டன. இவற்றை இணையதளம் மூலமாகவே, தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...