விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது!
ஜூன் மாதத்தில் நடைபெறவுள்ள தேர்வுகள், நுழைவுத்தேர்வுகள், விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதிகள் ஆகியவற்றை காட்டும் காலண்டர் இது. தனியே எடுத்து பத்திரப்படுத்துங்கள்.
ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் ஐந்து ஆண்டு ஒருங்கிணைந்த எம்.ஏ., எம்.எஸ்சி. படிப்புகளில் சேர நுழைவுத் தேர்வு நடைபெறும் தேதி: ஜூன் 1 முதல் 7 வரை.
திருவாரூர் உள்ளிட்ட மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை, ஒருங்கிணைந்த முதுநிலை பட்டப் படிப்புகளில் சேர சென்ட்ரல் யுனிவர்சிட்டி காமன் என்ட்ரன்ஸ் டெஸ்ட் நடைபெறும் தேதி: ஜூன் 2, 3.
தமிழ்நாடு ஆசிரியர்கள் தேர்வு வாரியம் நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறும் நாள்: ஜூன் 3.
காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழகத்தில் எம்.பில். படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 4.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் விவசாயப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 6.
அரசு ஒதுக்கீட்டின்கீழ் அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 6.
தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் இளநிலை பொறியியல் பட்டப் படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டின்கீழ் சேர விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 6
டாடா இன்ஸ்டிட்யூட் ஆஃப் சோஷியல் சயின்ஸில் பி.ஏ. சமூக அறிவியல் படிப்புக்கு நுழைவுத் தேர்வு நடைபெறும் நாள்: ஜூன் 10.
தரமணியில் உள்ள எம்.ஜி.ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில் டிப்ளமோ படிப்பில் சேர விண்ணப்பிக்க கடைசி தேதி:ஜூன் 15.
அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் ஸ்கூல் ஆஃப் எக்ஸலன்ஸ் மற்றும் அரசு சட்டக் கல்லூரியில் 5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்பில் சேர விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 15.
ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ்காந்தி நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் யூத் டெவலப்மெண்ட்டில் முதுநிலைப் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு நடைபெறும் நாள்: ஜூன் 16.
கால்நடை மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி : ஜூன் 18.
பெரியார் பல்கலைக்கழகத்தில் எம்.சி.ஏ. படிப்புக்கான நுழைவுத் தேர்வு நடைபெறும் நாள்: ஜூன் 18 காலை 9.30 மணி.
பெரியார் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புக்கான நுழைவுத் தேர்வு நடைபெறும் நாள்: ஜூன் 18 மதியம் 1 மணி.
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இந்தியன் என்ஜினீயரிங் சர்வீஸஸ் எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் : ஜூன் 20.
எஸ். ஆர். எம். பல்கலைக்கழகத்தில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பிக்க கடைசி தேதி : ஜூன் 20.
பிளஸ் டூ மாணவர்களுக்கு உடனடி மறு தேர்வு நடைபெறும் தேதி: ஜூன் 22
பாலிடெக்னிக் படித்த மாணவர்கள் அரசு மற்றும் அரசு உதவிபெறும் என்ஜினீயரிங் கல்லூரிகளில் நேரடியாக பி.இ. 2-ஆம் ஆண்டில் (லேட்டரல் என்ட்ரி முறையில்) சேர விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 26.
எஸ். ஆர். எம். பல்கலைக்கழகத்தில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கான நுழைவுத் தேர்வு நடைபெறும் நாள் : ஜூன் 30.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...