அரசு கலை கல்லூரிகளில், பட்டப் படிப்பிற்கான விண்ணப்ப வினியோகம் முடிந்துள்ள நிலையில், வரும் 18ம் தேதி முதல் கலந்தாய்வு நடைபெற உள்ளது.
சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள ராணி மேரி கல்லூரியில், 14ம் தேதி மாணவர் தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது. 18ம் தேதி கணிதம், வேதியியல் பாடத்திற்கும், அடுத்த நாள் கணிப்பொறி படிப்பிற்கும், 20ம் தேதி பி.காம்., படிப்பிற்கும், 21ம் தேதி மற்ற அறிவியல் படிப்பிற்குமான கலந்தாய்வு நடைபெற உள்ளது.
பிராட்வே பாரதி பெண்கள் கல்லூரியில், 14ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது. 18ம் தேதி, பி.காம்., படிப்பிற்கும், அடுத்த நாள் பொருளாதார பாடத்திற்கான, கவுன்சிலிங் நடைபெறுகிறது. 20ம் தேதி வரலாறு பாடத்திற்கும், 22ம் தேதி வேதியியல், உயிரியல் பாடத்திற்கும், 25ம் தேதி தாவரவியல், விலங்கியல், புவியியல் உள்ளிட்ட பாடத்திற்கான கவுன்சிலிங் நடைபெற உள்ளது.
தியாகராஜ கல்லூரியில் இன்று (14ம் தேதி) தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது. 19ம் தேதி கவுன்சிலிங் துவங்குகிறது. 21ம் தேதி பி.காம்., பாடத்திற்கான கவுன்சிலிங் நடக்கிறது.
ராணி மேரி கல்லூரி முதல்வர் சீதாலட்சுமி கூறுகையில், வரும் 18ம் தேதி கவுன்சிலிங் நடைபெற உள்ளதால், மாணவியரின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு, அதற்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு உள்ளன. தரவரிசைப் பட்டியலில் மாணவர்கள் தங்களுக்கு உரிய இடங்களை தெரிந்து கொள்ளலாம் என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...