பத்தாம் வகுப்பு உடனடி தேர்வுக்கு, "தத்கால்" திட்டத்தின் கீழ், 13ம் தேதி முதல், 15ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
உடனடித் தேர்வு, இம்மாதம் 25ம் தேதி முதல், ஜூலை 5ம் தேதி வரை நடக்கிறது. தேர்வுத் துறை மண்டல துணை இயக்குனர் அலுவலகங்கள், மாவட்டக் கல்வி அலுவலகங்களில், விண்ணப்பங்கள் வழங்கப்படும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, சம்பந்தப்பட்ட மண்டல துணை இயக்குனர் அலுவலகங்களில், நேரில் வழங்க வேண்டும்.
இத்திட்டத்தில் விண்ணப்பிக்கும் தேர்வருக்கு, சென்னை, வேலூர், கடலூர், திருச்சி, மதுரை, கோவை மற்றும் நெல்லை ஆகிய இடங்களில், தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என, தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தரா தெரிவித்தார். அனைத்து தனித் தேர்வர்களுக்கும், 20, 21 தேதிகளில், "ஹால் டிக்கெட்" வழங்கப்படும்.
ஏப்ரலில் நடந்த தேர்வை எழுதி தோல்வியுற்ற மாணவ, மாணவியர், படித்த பள்ளிகளிலேயே, "ஹால் டிக்கெட்" களை பெறலாம். ஏற்கனவே, தனித்தேர்வராக எழுதியவர்களுக்கு, கல்வி மாவட்ட வாரியாக நிர்ணயிக்கப்பட்டுள்ள மையத்தில், "ஹால் டிக்கெட்" வழங்கப்படும்.
மெட்ரிக் தனித் தேர்வர், ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களை எழுதினால், தலா, 100 ரூபாய் வீதம், கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். ஆங்கிலோ இந்தியன் மாணவராக இருந்தால், கூடுதலாக, தலா, 50 ரூபாய் செலுத்த வேண்டும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...