Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TET - 14 ஆயிரம் மனுக்களில் பெயர்களே இல்லை: தேர்வு வாரியம் அதிர்ச்சி


           டி.இ.டி., தேர்வுக்கு விண்ணப்பித்த 6.50 லட்சம் பேரில், 14 ஆயிரம் பேர், விண்ணப்பங்களில் தங்களது பெயர்களைக் கூட பூர்த்தி செய்யாமல் கோட்டை விட்டுள்ளனர்.
மேலும், 28 ஆயிரம் பேர், பல்வேறு தவறுகளை செய்திருப்பதைக் கண்டு, ஆசிரியர் தேர்வு வாரியம் அதிர்ச்சி அடைந்துள்ளது. விண்ணப்பங்களைக் கூட ஒழுங்காக பூர்த்தி செய்யாதவர்கள் எல்லாம் ஆசிரியர்களாக வந்து என்ன செய்யப் போகிறார்களோ என, ஆசிரியர் தேர்வு வாரியம் கவலை அடைந்துள்ளது.

         ஜூன் 3ம் தேதி, டி.இ.டி., தேர்வு நடக்கிறது. இத்தேர்வுக்காக 7.50 லட்சம் விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டதில், 6.50 லட்சம் விண்ணப்பங்கள் மட்டும் பூர்த்தி செய்யப்பட்ட நிலையில் பெறப்பட்டன. இந்த விண்ணப்பங்களை, "ஸ்கேன்&' செய்யும் பணிகள், சென்னை, அசோக்நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தன.
டி.ஆர்.பி., அதிர்ச்சி: விண்ணப்பங்கள், "ஸ்கேன்' செய்யப்பட்டு, பரிசீலனை செய்த ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலர்கள், கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆசிரியர்களாக இருப்பவர்களிலும், ஆசிரியர் பணிக்காக விண்ணப்பித்தவர்களிலும், பல ஆயிரம் பேர் விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்யாதது தான், அலுவலர்களின் அதிர்ச்சிக்கு காரணம். குறிப்பாக, ஆசிரியர் பணிக்காக விண்ணப்பித்தவர்கள் தான், அதிகளவில் தவறுகள் செய்துள்ளனர்.
14 ஆயிரம் பேர்... : மொத்த விண்ணப்பதாரர்களில், 14 ஆயிரம் பேர், மிகவும் முக்கியமான தங்களது பெயர்களையே பூர்த்தி செய்யவில்லை. மேலும், 28 ஆயிரம் பேர், பல்வேறு தவறுகளை செய்திருப்பதாகவும், தேர்வு வாரியம் கண்டுபிடித்துள்ளது. பல ஆயிரம் பேர், முக்கிய பாடத்தை தவறாக குறிப்பிட்டுள்ளனர். இதேபோல், பல்வேறு தவறுகளை செய்திருக்கின்றனர்.
நிராகரிப்பு இல்லை: விண்ணப்பத்தில் முக்கியமான தவறுகள் இருந்தால், விதிமுறைப்படி அந்த விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட வேண்டும். இப்படி, பல தேர்வுகளில் தவறான விண்ணப்பங்கள் நிராகரிக்கவும் செய்யப்படுகின்றன. ஆனால், டி.இ.டி., தேர்வைப் பொறுத்தவரை, தவறான விண்ணப்பங்களை நிராகரிக்காமல், அந்த விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது என, ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. விண்ணப்பக்கட்டணம், தேர்வுக் கட்டணம் ஆகியவற்றை செலுத்திய நிலையில், விண்ணப்பங்களை நிராகரித்தால், தேர்வர்கள் அதிர்ச்சி அடைவர். முக்கியமாக, இதோடு அடுத்த ஆண்டுதான் டி.இ.டி., தேர்வு நடைபெறும். எனவே, ஒரு ஆண்டு வீணாகும்.
குறிப்பாக, கட்டாயக் கல்வி சட்டம் அமலுக்கு வந்த தேதிக்குப் பின் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர்ந்த அனைவரும், ஐந்து ஆண்டுகளுக்குள் டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என, நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இச்சூழலில், தவறான விண்ணப்பங்களை நிராகரித்தால், ஆசிரியர் பணியில் இருப்பவர்களுக்கு ஒரு ஆண்டு வீணாக நேரிடும். இதை மனதில் கொண்டு தான், தவறான விண்ணப்பங்களையும் ஏற்பது என, ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு எடுத்திருப்பதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
தேர்வு தள்ளி வைப்பா?: டி.இ.டி., தேர்வு தள்ளி வைக்கப்படுமா என்றும் தேர்வர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. பாடப்புத்தகங்கள் தற்போது தான் கிடைத்து வருகின்றன. பி.எட்., தேர்வுகள் ஒரு பக்கம், மறுபக்கம் டி.இ.டி., தேர்வுகள் என்பதால், தேர்வர்கள் தவித்து வருகின்றனர். ஆனால், டி.இ.டி., தேர்வுக்கான ஏற்பாடுகள், ஆசிரியர் தேர்வு வாரியத்தில் முழுவீச்சில் நடந்து வருகின்றன. எனவே, தேர்வு தள்ளி வைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்று தெரிகிறது.




Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive