எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் செவ்வாய்க்கிழமை (மே 15) முதல் விற்பனை செய்யப்பட உள்ளன.
இதற்கான அறிவிப்பை மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலக மாணவர் சேர்க்கைத் தேர்வுக் குழு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது.
தமிழகம் முழுவதும் உள்ள 17 அரசு மருத்துவக் கல்லூரிகள், பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளன. விடுமுறை நாள்கள் உள்பட அனைத்து நாள்களிலும் விண்ணப்பங்கள் வழங்கப்படும். விண்ணப்பத்தைப் பெற வரும் மே 30-ம் தேதி கடைசி நாள். ஒரு விண்ணப்பக் கட்டணம் ரூ.500. "The Secretary, Selection Committee, Kilpauk, Chennai -10' என்ற பெயரில் சென்னையில் மாற்றத்தக்கதாக வரைவோலையாக செலுத்தி விண்ணப்பத்தை பெறலாம்.
எம்.பி.பி.எஸ்.- பி.டி.எஸ். படிப்பு ஆகிய இரண்டுக்கும் சேர்த்து ஒரே விண்ணப்பம் மட்டுமே விநியோகிக்கப்படும். விண்ணப்பத்தை சுகாதாரத் துறையின் இணையதளமான www.tnhealth.org மூலம் பதிவிறக்கம் செய்தும் விண்ணப்பிக்கலாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...