மருத்துவ மாணவர்கள், கிராமப்புறங்களில், ஓராண்டு பணியாற்ற வேண்டும் என்பதை கட்டாயமாக்கப் போவதாக மத்திய சுகாதார அமைச்சர் குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக, மக்களவையில் குலாம்நபி ஆசாத் பேசியதாவது: கிராமப்புறங்களில் 3 ஆண்டுகள் பணியாற்றினால், அவர்கள் மருத்துவ முதுநிலைப் படிப்பில் சேர 50% இடஒதுக்கீடும், ஓராண்டு பணியாற்றினால் 10 மதிப்பெண்களும், பின்தங்கிய கிராமங்களில் பணியாற்றினால் 30 மதிப்பெண்களும் வழங்கப்படும் என்ற அறிவிப்பை அரசு ஏற்கனவே வெளியிட்டிருந்தது.
ஆனால், இவ்வளவு சலுகைகளை அறிவித்தாலும்கூட, கிராமப்புறங்களில் பணியாற்ற மருத்துவ மாணவர்கள் முன்வரவில்லை. எனவேதான், கிராமப்புறங்களில் பணியாற்றுவதை கட்டாயமாக்கும் நிலை வந்துள்ளது.
இந்தியாவில் படித்துவிட்டு பணியாற்றும் மருத்துவர்களின் பதிவு விபரங்கள் மத்திய அரசுக்கு முழுமையாக கிடைக்கவில்லை. இதன்பொருட்டு, படிப்பு முடிந்து பணியை ஆரம்பிக்கும் மருத்துவர்கள், தங்களைப் பதிவுசெய்து கொள்ளும் நடைமுறை ஒழுங்கமைவு செய்யப்படும்.
சில மருத்துவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்களில் பதிவுசெய்து கொள்வதாலும், சிலர் வெளிநாடுகளுக்கு சென்று விடுவதாலும், துல்லியமான எண்ணிக்கை கிடைப்பதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...