சத்துணவு மையங்களில், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள், இன்று முதல்(மே 18ம் தேதி) வழங்கப்படுகிறது.
சத்துணவு மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டங்களின் கீழ் செயல்படும் சத்துணவு மையங்களில், காலியாக உள்ள, 16 ஆயிரத்து 56 சத்துணவு அமைப்பாளர், சமையலர், சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படும் என, தமிழக அரசு சமீபத்தில் அறிவித்து இருந்தது.
அதன்படி, இதற்கான விண்ணப்பங்கள், இன்று முதல் வழங்கப்படுகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க, வரும் 28ம் தேதி கடைசி நாள். அனைத்து வட்டாரங்களிலும் பெறப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, நேர்முகத் தேர்வுக்கு தகுதியானவர்களுக்கு, ஜூன் 2ம் தேதி அழைப்புக் கடிதம் அனுப்பப்படும். 9ம் தேதி நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு, 15ம் தேதி பணி நியமன ஆணை வழங்கப்படும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...