எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர இந்த ஆண்டும் கடும் கட்-ஆஃப் மதிப்பெண் போட்டி ஏற்பட்டுள்ளதால் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு இடமாவது கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு மாணவர்களிடையே எழுந்துள்ளது. தமிழகத்தில் உள்ள 11 சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 1,460 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன.
இவற்றில் சிறுபான்மை அந்தஸ்து அல்லாத கல்லூரிகள் 65 சதவீத இடங்களையும், சிறுபான்மை அந்தஸ்து பெற்றுள்ள கல்லூரிகள் 50 சதவீத இடங்களையும் அரசு ஒதுக்கீட்டுக்கு அளிக்கின்றன. இவ்வாறு அரசு ஒதுக்கீட்டுக்கு 839 எம்.பி.பி.எஸ். இடங்கள் கிடைக்கின்றன. சிறந்த கல்லூரி கிடைக்காவிட்டால்...÷எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர 200-க்கு 197-க்கு மேல் கட்-ஆஃப் மதிப்பெண் பெற்றும்கூட, கலந்தாய்வில் சிறந்த அரசு மருத்துவக் கல்லூரி கிடைக்காத நிலையில், சுயநிதி கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடத்தை சில மாணவர்கள் தேர்வு செய்வது உண்டு. இதனால்தான் அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கான கலந்தாய்வுடன் சேர்த்து, சுயநிதி மருத்துவக் கல்லூரியில் உள்ள அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடத்துக்கும் மாணவர்கள் சேர்க்கப்படுவது வழக்கமாக உள்ளது. மேலும் எப்படியாவது எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர விரும்பும் மாணவர்களும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளைத் தேர்வு செய்கின்றனர். கடந்த ஆண்டு கட்-ஆஃப் எவ்வளவு? சுயநிதி அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு கடந்த ஆண்டு (2011-12) கலந்தாய்வுக்குப் பிறகு கட்-ஆஃப் மதிப்பெண் விவரம்: ஓ.சி. - 196.25; பி.சி. - 195.75; பிசிஎம் - 193.75; எம்பிசி - 193.75; எஸ்சி - 186.00; எஸ்சிஏ - 174.25; எஸ்டி - 166.75. கடந்த ஆண்டு கட்-ஆஃப் மதிப்பெண்ணைக் காட்டிலும் இந்த ஆண்டு ஒவ்வொரு பிரிவுக்கும் 1 முதல் 1.5 வரை கட்-ஆஃப் மதிப்பெண் உத்தேசமாகக் குறைய வாய்ப்பு உண்டு என கல்வியாளர்கள் தெரிவித்தனர். அதாவது, சுயநிதி அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடத்துக்கு பொதுப் பிரிவினருக்கான கட்-ஆஃப் மதிப்பெண் 195-ஆகக் குறைய வாய்ப்புள்ளதாக கல்வியாளர்கள் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...