Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆசிரியர் தகுதித் தேர்வை அணுகுவது எப்படி?


தமிழக அரசு நடத்த ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது மிகவும் முக்கியம் என்ற நிலையில், இத்தேர்வை எழுத 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் தயாராகி வருகின்றனர்.
ஆசிரியர் தகுதித் தேர்வை எளிதாக அணுக உதவும் வகையில் சில ஆலோசனைகள் இங்கே:

இத்தேர்வை எழுதும் முன், தேர்வுக்கான கேள்வித்தாள் எவ்வாறு இருக்கும்?  150 கேள்விகளுக்கு வெறும் 90 நிமிடங்களில் பதிலளிக்க முடியுமா? Multiple choice கேள்விகள் தேர்வுகளுக்காக பயிற்சி எடுக்க வேண்டுமா?

மாதிரி பேப்பர்களைக் கொண்டு வீட்டில் பயிற்சி செய்தால், நிஜ தேர்வுக்கான சரியான பயிற்சியை பெற முடியுமா? பலவீனமாக இருக்கக்கூடிய அல்லது நன்றாக கவனம் செலுத்த வேண்டிய பகுதிகளை எவ்வாறு அடையாளம் காண்பது? என்னுடைய புலமையை அளவிடுவதற்கு என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? இதுபோன்ற பல கேள்விகளுக்கு நாம் விடைகாண வேண்டியுள்ளது.
தேர்வு எழுதுவதற்கான தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் நீங்கள் எளிதாகப் பெற வேண்டுமெனில், அதற்கு மாதிரி தேர்வே (model or mock test) ஒரு சிறந்த வழி. இதுபோன்ற தேர்வுகளை எழுத, பிரிண்ட் செய்யப்பட்ட படிவங்கள் answer key -யுடன் கிடைக்கின்றன. இதுபோன்ற மாதிரி தேர்வுகளை எழுதும்போது, உண்மையான தேர்வு சூழல் போன்ற ஒன்றை உருவாக்கி எழுதிப் பார்க்க வேண்டும்.
      மேலும், நிபுணர்களால் வழங்கப்படும் மாதிரித் தேர்வுகளை நீங்கள் எழுதிப் பார்ப்பது நல்ல பலனைத் தரும்.
ஏனெனில், அந்த நிபுணர்களுக்கு, உங்களின் தேர்வை பகுப்பாய்வு செய்த அனுபவம் இருக்கிறது. அதுமட்டுமின்றி, நீங்கள் பெற்ற மதிப்பெண் பற்றிய தங்களின் மதிப்பீட்டை அவர்கள் வழங்குவதோடு, நீங்கள் எதில் பலவீனமாக இருக்கிறீர்கள் மற்றும் நீங்கள் கவனம் செலுத்த வேண்டிய பகுதிகள் எவை போன்றவை பற்றிய ஆலோசனைகளையும் அவர்கள் தருகிறார்கள்.
நீங்கள் மாதிரி தேர்வை எப்போது எழுதலாம் என்ற கேள்வி எழலாம்? உங்களின் அடிப்படை தயார்செய்தலை முடித்தப் பின்னரே, மாதிரி தேர்வை எழுத வேண்டும். மேலும், நிஜ தேர்வுக்கு, குறைந்தபட்சம் 15 நாட்களுக்கு முன்னர் மாதிரித் தேர்வை எழுதுதல் சிறந்தது. இதன்மூலம் உங்களின் நிலைப் பற்றிய சிறந்த மதிப்பீட்டை நீங்கள் பெறுவீர்கள்.
இத்தேர்வின் முடிவில், உங்களின் முன்னேற்றம் மற்றும் பலவீனங்களை ஆராய்ந்து, அதன்மூலம் நிஜ தேர்வுக்கு உங்களை சிறப்பாக தயார்செய்து கொள்ளலாம்.
மாதிரித் தேர்வுகள் என்பவை, உங்களின் பலவீனங்களை அறிந்து, அதன்மூலம் உங்களின் குறைகளை நிவர்த்தி செய்து கொள்வதற்கு பெரிதும் பயன்படுபவை. நீங்கள் செய்த பிழைகளுக்கான காரணத்தை நீங்கள் கண்டுபிடித்து, அதை களையலாம். இத்தகைய தேர்வுகளின் மூலமாக, நீங்கள் அடிக்கடி மற்றும் ஒரே ஒருமுறை மட்டுமே செய்த தவறுகள் குறித்து அறிந்துகொள்ளலாம்.
தயாராதலை அப்போதுதான் முடித்திருக்கும் ஆசிரியர்கள், முழு அளவிலான மாதிரி தேர்வுகளை எழுதுதல் நலம். இதன்மூலம், நிஜ தேர்வு நாளில் எவ்வாறு எழுதலாம் என்ற ஐடியா கிடைக்கும்.

தினமலர், கல்விமலர் மற்றும் எவரான் இணைந்து, TN-TET மாதிரித் தேர்வை நடத்துகிறது. இந்த மாதிரித் தேர்வை எழுத www.kalvimalar.com/tntet என்ற இணையதளத்தில், இல்லத்திலிருந்தோ அல்லது இண்டர்நெட் மையம் சென்றோ, இலவசமாகப் பதிவுசெய்து TN-TET மாதிரித் தேர்வை எழுதலாம்.

தேர்வை முடித்தப் பின்பாக, தேர்வு முடிவுகள் மற்றும் தாங்கள் மேம்படுத்திக் கொள்ள வேண்டிய அம்சங்கள் பற்றி  SMS/eMAIL மூலமாக தெரிவிக்கப்படும். மே 18 முதல் மே 20 வரை இத்தேர்வை ஆன்லைனில் இலவசமாக எழுதலாம். தமிழகத்தில் உள்ள குறிப்பிட்ட 12 எவரான் மையங்களில் இத்தேர்வை நேரிலும் எழுதலாம்.
வாழ்த்துக்கள்!




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive