"பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும்' என, தமிழக ஆசிரியர் கூட்டணி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழக ஆசிரியர் கூட்டணியின் சார்பில், கட்டாயக்கல்விச் சட்டம் குறித்த கருத்தரங்கு மற்றும் மாநாடு ஆகியவை, சென்னையில் நேற்று நடந்தன. இதில், பல்வேறு மாநிலங்களில் இருந்து, 1,000த்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், பல்வேறு ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
ஆசிரியர்களை, பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும்; பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்; மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஓய்வூதியம் வழங்க வேண்டும்; வாடகைப்படியை உயர்த்த வேண்டும் என்பது உட்பட 11 தீர்மானங்கள், மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.