அங்கன்வாடி குழந்தைகளுக்கு, இந்த ஆண்டு முதல், இரண்டு வண்ண உடைகள் வழங்கும் புதிய திட்டத்தை, முதல்வர் அறிவித்துள்ளார்.
புகையில்லா சமையலறைகள்: தமிழகத்தில் உள்ள, 16 ஆயிரத்து 645 அங்கன்வாடி மையங்களில், சமைக்கும் நேரத்தை மிச்சப்படுத்தும் வகையில், மாசற்ற சுற்றுச்சூழலை உருவாக்கும் வகையிலும், "புகையில்லா சமையலறைகள்" அமைக்கப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள, 37 ஆயிரத்து 794 அங்கன்வாடி மையங்களில், 5,000 அங்கன்வாடி மையங்களில், இந்த ஆண்டில் 3 கோடியே 20 லட்ச ரூபாய் செலவில், எரிவாயு அடுப்பு, எரிவாயு இணைப்பு, அழுத்தக் கலன் (பிரஷர் குக்கர்) ஆகிய உபகரணங்கள் வழங்கப்படும்.
இந்த மையங்களில், அதிக அளவில் குழந்தைகள், ஊட்டச் சத்து உணவைப் பெற, 2 வயது முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகள், பள்ளிசாரா முன்பருவக் கல்வி பெறுவதை ஊக்குவிக்கவும், 2 வயது முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு, இரண்டு வண்ண உடை இந்த ஆண்டு முதல் வழங்கப்படும்.
5 மாவட்டங்களில் அமல்: இந்த முன்னோடித் திட்டம், முதற்கட்டமாக, சென்னை, வேலூர், திருச்சி, தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள, 2 லட்சத்து ஆயிரத்து 32 குழந்தைகள் பயனடையும் வகையில், 4 கோடியே 30 லட்சம் ரூபாய் செலவில், இது அமல்படுத்தப்படும். எம்.ஜி.ஆர்., சத்துணவு திட்டத்தின் கீழ் பயனடையும் பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வந்த இரண்டு இணை சீருடைகளை, நான்கு இணை சீருடைகளாக, இந்த ஆண்டு முதல் உயர்த்தி வழங்கப்படும்.
ஊட்டச்சத்து குறையை போக்கும் பணி: குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டைப் போக்கும் பணியில், அங்கன்வாடி மையங்கள் ஈடுபட்டு வருகின்றன. இந்த மையங்களில், இணை உணவு, முட்டை, சூடான மதிய உணவு ஆகியவற்றுடன், முன் பருவக் கல்வியும் குழந்தைகளுக்கு அளிக்கப்படுகின்றன. இம்மையங்களில், கர்ப்பிணிகள் பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் வளர் இளம்பெண்கள் ஆகியோருக்கு, சத்து தரும் உணவும், முதியோருக்கு மதிய உணவும் அளிக்கப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களின் எண்ணிக்கை 54,439 மற்றும் பயனாளிகள் 31 லட்சம் ஆவர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...