விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க, மே 23 முதல் மே 25ம் தேதி வரை, அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்கள், இணை இயக்குனர் (கல்வி), புதுச்சேரி, அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்கள் மற்றும் அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குனர் அலுவலகங்களில்(சென்னை தவிர்த்து) விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்படும். சென்னை டி.பி.ஐ., வளாகத்தில் அமைந்துள்ள அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் விற்பனை செய்யப்படாது.
விடைத்தாள் நகலுக்கு, மொழிப் பாடம் மற்றும் ஆங்கிலம் ஒவ்வொன்றிற்கும் 550 ரூபாய், இதர பாடங்கள் ஒவ்வொன்றிற்கும் 275 ரூபாய் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
மறுகூட்டலுக்கு, மொழி, ஆங்கிலம், உயிரியல் ஆகிய பாடங்கள் ஒவ்வொன்றிற்கும் 305 ரூபாய், இதர பாடங்கள் ஒவ்வொன்றிற்கும் 205 ரூபாய் என கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கான கட்டணத் தொகையை, தேசியமயமாக்கப்பட்ட ஏதேனும் ஒரு வங்கியில் சென்னையில் மாற்றத்தக்க வகையில், "Director of Government examinations, chennai 6' என்ற பெயரில் எடுக்கப்பட்ட வங்கி வரைவோலையை ஒப்படைத்து விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாணவர்கள் விண்ணப்பங்கள் பெற்ற அலுவலகங்களில் மட்டுமே நேரில் ஒப்படைக்க வேண்டும்.
விடைத்தாள் நகல் கிடைத்த பின், மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், விடைத்தாள் நகல் கிடைத்த ஐந்து நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மறுமதிப்பீடு கட்டணம், மொழி மற்றும் ஆங்கில மொழிப் பாடங்கள் ஒவ்வொன்றிற்கும் 1,010 ரூபாய், இதர பாடங்கள் ஒவ்வொன்றிற்கும் 505 ரூபாய் என செலுத்த வேண்டும்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...