Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

டி.இ.டி. தேர்வு ஜுலை 12ம் தேதிக்கு ஒத்திவைப்பு.


கேள்வித்தாள் தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள் முடிவடையாததால், ஜூன் 3ம் தேதி நடக்க இருந்த டி.இ.டி., தேர்வு, ஜூலை 12ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
தேதி மாற்றம்
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பு: ஜூன் 3ம் தேதி டி.இ.டி., தேர்வு நடைபெறும் என, மார்ச் 7ம் தேதி அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டது. தேர்வுக்கான பணிகள் நடந்து வரும் நிலையில், தேர்வர்களிடம் இருந்து, அரசுக்கும், ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கும், "தேர்வை தள்ளி வைக்க வேண்டும்" என, தொடர்ந்து கோரிக்கை வந்தது.
தேர்வுக்கு தயாராவதற்கான கால அவகாசம் குறைவாக உள்ளது என்றும்; டி.இ.டி., தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களே, வேறு பல தேர்வுகளை எழுத இருப்பதாக தெரிவித்து, தேர்வை தள்ளி வைக்க கோரிக்கை வைத்தனர். இதை ஏற்று, டி.இ.டி., தேர்வு, ஜூலை 12ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது. அரசு வேலை நாளில் இத்தேர்வு நடைபெறுவதால், அதற்கேற்ப உரிய ஏற்பாடுகள் செய்யப்படும் எனக் கூறப்பட்டது.
தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு பெறுபவர்கள்?: இதேபோல், யாரெல்லாம் டி.இ.டி., தேர்வை எழுதத் தேவையில்லை என கேட்டும், பலர் கடிதங்களை அனுப்பினர். அதன்படி, 2010, ஆக., 23ம் தேதிக்கு முன், ஆசிரியர் தேர்வு தொடர்பான விளம்பரம் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்று, அதன்பின் பணி நியமனம் பெற்றவர்கள், டி.இ.டி., தேர்வை எழுதத் தேவையில்லை. இவ்வாறு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
காரணம் என்ன?
தேர்வை தள்ளி வைப்பதற்கு உண்மையான காரணம் என்னவென்று விசாரித்த போது, அந்த வட்டாரத்தில் கூறப்பட்ட தகவல்: கேள்வித்தாள்கள் இன்னும் தயாராகவில்லை; அதேபோல், "ஹால் டிக்கெட்" தயாரிக்கும் பணிகளும் முடியவில்லை. இதற்கிடையே, 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்யாமல் அரைகுறையாக விட்டுள்ளனர். இப்படிப்பட்ட விண்ணப்பங்களை அப்படியே ஏற்பது, பின்னாளில் பிரச்சினை வரலாம். எனவே, விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்யாதவர்கள், தவறுகளை சரி செய்யவும், விடுபட்ட இடங்களை நிரப்பவும், ஒரு வாய்ப்பு தரப்படும்.
அதன்படி, விண்ணப்பதாரர், விண்ணப்ப எண்களை இணையதளத்தில் பதிவு செய்தால், விண்ணப்பத்தின் நிலை மற்றும் அதில் உள்ள தவறுகள் அனைத்தும் தெரிய வரும். இதை சரி செய்த பின், சம்பந்தப்பட்ட விண்ணப்பங்கள் ஏற்கப்படும். இதுபோன்ற பணிகளுக்காகவும், தேர்வர்கள் நன்றாக தேர்வுக்கு தயாராவதற்கு வசதியாகவும், ஒரு மாதம் தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
ஜூலை 12ம் தேதி விடுமுறை: அரசு வேலை நாளில், டி.இ.டி., தேர்வு நடப்பதால், அதில், பணிபுரியும் ஆசிரியர்கள் பங்கேற்க வசதியாக, அவர்களுக்கு ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படும் என்றும்; வேறொரு நாளில், பணி நாளாக அது ஈடு செய்யப்படும் என்றும் டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.




Related Posts:

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive