அரசாணை எண். 15 பள்ளிக்களிவித்துறை நாள். 23.1.2012-ன் படி உருவாக்கப்பட்ட 1267 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு கடந்த 4 மாதங்கள் ஆகியும் பதவி உயர்வு அளிக்கப்படாத சூழ்நிலையில் தமிழகம் முழுவதும் தொடக்கக்கல்வி துறையின் கீழ் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகினர். பதவி உயர்வு வழங்காததை எதிர்த்து 17 இடைநிலை ஆசிரியர்கள் சென்னை
உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தனர். வழக்கு விசாரணை கடந்த ஒரு மாதமாக நடந்து வந்த நிலையில் தற்பொழுது சம்பந்தப்பட்டவர்கள் அளித்த மனுக்களை பரிசீலனை செய்து பதை உயர்வு வழங்கி உரிய உத்தரவு 8 வாரத்திற்குள் பிறப்பிக்க தொடக்கக்கல்வ்வி இயக்குனருக்கு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் சற்று நிம்மதி
அடைந்துள்ளனர்.
அடைந்துள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...