தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் இளநிலை பொறியியல் படிப்பில் சேர
விரும்பும் மாணவர்களுக்கான விண்ணப்பங்கள் வரும் மே 11ம் தேதி முதல்
வழங்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில்
சுமார் 58 மையங்களில் மே 31ம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும்
என்றும், அன்று மாலை 5.30 மணிக்குள் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை
சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.பொதுப்பிரிவு மாணவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.500 ஆகவும், எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு ரூ.250 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பம் வாங்க வரும் மாணவர்கள் அவர்களது ஜாதி சான்றிதழின் நகலை எடுத்து வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.