தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 04404 / இ1 / 2012, நாள். 12.05.2012.
தொடக்கக்கல்வித் துறை சார்ந்த அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான 2012 - 2013 ஆம் ஆண்டு 01.06.2012 அன்று ஏற்படும் உத்தேச காலிப்பணியிடங்களுக்கு 01.01.2012 தேதியின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட முன்னுரிமை / பதவி உயர்விற்கு தகுதிவாய்ந்தோர் பட்டியல் சரிப்பார்த்து ஒப்புதல் வழங்க மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் கூட்டம் நடத்தப்பட உள்ளது.
இக்கூட்டத்திற்கு வரும் போது கடந்த ஆண்டு மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரால் ஒப்புதல் அளித்த (01.01.2011) முன்னுரிமை / பதவி உயர்விற்கு தகுதிவாய்ந்தோர் முன்னுரிமைப் பட்டியல் தவறாது கொண்டு வரவும்.
மேற்கூறிய ஆய்வு கூட்டம் கீழ்காணும் பட்டியலின்படி நடைபெறவுள்ளது.
இடம் நாள் மாவட்டங்கள்
காஞ்சிபுரம் - 17.05.2012 ( காஞ்சிபுரம், விழுப்புரம், திருவள்ளூர் )
திருச்சி - 18.05.2012 ( திருச்சி, அரியலூர், கரூர், பெரம்பலூர் )
தஞ்சாவூர் - 18.05.2012 ( தஞ்சாவூர், நாகை, புதுகோட்டை, திருவாரூர் )
ஈரோடு - 19.05.2012 ( ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி )
சேலம் - 21.05.2012 ( கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி, நாமக்கல் )
மதுரை - 23.05.2012 ( சிவகங்கை, இராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல் )
திருநெல்வேலி-23.05.2012 (கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்தக்குடி, விருதுநகர் )
திருவண்ணாமலை-25.05.2012 (திருவண்ணாமலை, வேலூர், கடலூர் )
மேலே குறிப்பிட்ட அனைத்து இடங்களிலும் காலை 10.00 மணிக்கு கூட்டம் தொடங்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...