டி.இ.டி., தேர்வு, திட்டமிட்டபடி ஜூன் 3ம் தேதி நடைபெறும். இதில், எவ்வித மாற்றமும் கிடையாது" என, டி.ஆர்.பி., தலைவர் சுர்ஜித் சவுத்ரி கூறினார்.
இதுகுறித்து, அவர் நிருபர்களிடம் கூறியதாவது: ஆசிரியர் தகுதித் தேர்வு(டி.இ.டி.,), ஜூன் 3ம் தேதி நடைபெறும் என, ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இத்தேர்வு, வேறு தேதிக்கு மாற்றப்படுமா என்பது குறித்து, தொடர்ந்து கேள்விகள் எழுப்பப்படுகின்றன. தேர்வை நடத்துவதற்கான அனைத்துப் பணிகளும், திட்டமிட்டபடி நடந்து வருகின்றன.
எனவே, ஜூன் 3ம் தேதி டி.இ.டி., தேர்வு நடைபெறும்; இதில், எவ்வித மாற்றமும் கிடையாது. ஆறு லட்சத்து 56 ஆயிரத்து...