தமிழகம் உள்பட நாடு முழுவதும் 17 கோடி குழந்தைகளுக்கு இரண்டாவது தவணை போலியோ தடுப்பு கூடுதல் சொட்டு மருந்து ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 15) வழங்கப்படுகிறது. தமிழகத்தில் 70 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து
கொடுக்கப்படுகிறது.
சென்னையில் 5.2 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து அளிக்கப்படும். இளம்பிள்ளை வாதத்தை (போலியோ) அறவே ஒழிக்கும் நோக்கத்தில் குறிப்பிட்ட கால இடைவெளியில் போலியோ தடுப்புச் சொட்டு மருந்து இலவசமாக அளிக்கப்படுகிறது.
கொடுக்கப்படுகிறது.
சென்னையில் 5.2 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து அளிக்கப்படும். இளம்பிள்ளை வாதத்தை (போலியோ) அறவே ஒழிக்கும் நோக்கத்தில் குறிப்பிட்ட கால இடைவெளியில் போலியோ தடுப்புச் சொட்டு மருந்து இலவசமாக அளிக்கப்படுகிறது.
இந்த ஆண்டு முதல் தவணையாக பிப்ரவரி 19-ம் தேதி போலியோ தடுப்பு கூடுதல் சொட்டு மருந்து முகாம் நடந்தது. இதில் நாடு முழுவதும் 5 வயதுக்கு உள்பட்ட 17 கோடி குழந்தைகளுக்கும், தமிழகத்தில் சுமார் 70 லட்சம் குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து அளிக்கப்பட்டது. தமிழகம் உள்பட நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 15) நடைபெறும் முகாமில், முதல் சுற்றில் போலியோ சொட்டுமருந்து வழங்கப்பட்ட குழந்தைகளுக்கு இரண்டாவது தவணை போலியோ தடுப்பு கூடுதல் சொட்டு மருந்து வழங்கப்படும்.
மேலும் கடந்த பிப்ரவரி 19-ம் தேதிக்குப் பிறகு பிறந்த குழந்தைகளுக்கும் போலியோ தடுப்பு கூடுதல் சொட்டு மருந்து கொடுக்கப்படும்.
தமிழகத்தில் 40,000 மையங்கள்: தமிழகத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், பள்ளிகள், சத்துணவு மையங்கள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்களில் சுமார் 40,000 போலியோ தடுப்பு சொட்டு மருந்து சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டு போலியோ தடுப்பு சொட்டு மருந்து அளிக்கப்படும்.
பயணத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்க பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்களில் கூடுதலாக 1,000 சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்கள் இரவு பகலாக 3 நாள்களுக்குச் செயல்படும். தொலை தூரத்தில் உள்ள கிராமங்களில் வசிக்கும் குழந்தைகளுக்கு 900 நடமாடும் குழுக்கள் மூலம் போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
காலை 7 மணி முதல்...தேசிய தடுப்பூசி அட்டவணைப்படி, ஓரிரு நாள்களுக்கு முன் சொட்டு மருந்து வழங்கப்பட்டிருந்தாலும் முகாம் நாள்களில் மீண்டும் சொட்டு மருந்து கொடுக்க வேண்டும். சொட்டு மருந்து வழங்கப்படுவதை உறுதி செய்வதற்கு குழந்தைகளின் இடது கை சுண்டு விரலில் அடையாள மை வைக்கப்படும்.
இந்த முகாம் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும். முகாமில் சமூக நலத்துறை, கல்வித்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித் துறை, நகராட்சி நிர்வாக துறை ஆகிய அரசு துறைகள் மற்றும் அரசு சாரா அமைப்புகளான ரோட்டரி, இந்திய மருத்துவக் கழகம், இந்திய குழந்தைகள் கழகம், அரிமா சங்கம் ஆகியவையும் ஈடுபடுகின்றன.
மேலும் 2 லட்சம் பணியாளர்கள் முகாம் பணிகளில் ஈடுபட உள்ளனர்.