சென்னை, ஏப். 14 : மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகள் இனி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மாநில மொழிகளிலும் நடத்தப்படும் என்று மத்தியப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
முதல் முறையாக ஏப்ரல் 22ம் தேதி நடைபெற உள்ள யுபிஎஸ்சி தேர்வு மாநில மொழிகளில் நடத்தப்படும் என்றும், படிப்படியாக கீழ் நிலை மற்றும் இடைநிலை பதவிகளுக்கான தேர்வுகளிளும் மாநில மொழிகளில் நடத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
2012-13ம் ஆண்டில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் 1 லட்சம் பேர் மத்திய அரசுப் பணிகளுக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.