ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பங்கள், மாநிலம் முழுவதிலும் இருந்து, சென்னை, அசோக்நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு கொண்டு வரப்படுகின்றன.
டி.இ.டி., தேர்வுக்காக 12 லட்சம் விண்ணப்பங்கள் விற்பனை ஆனபோதும், 8 லட்சம் விண்ணப்பங்கள் மட்டுமே பூர்த்தியான நிலையில் பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மாவட்டங்களில் இருந்து, இந்த விண்ணப்பங்கள்,
சென்னை, அசோக்நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு வரத் துவங்கியுள்ளன.
விண்ணப்பங்கள் அனைத்தையும், இந்த மையத்தில் வைத்து, இடைநிலை ஆசிரியர் தேர்வுக்கான விண்ணப்பங்கள், பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான விண்ணப்பங்கள் ஆகிய இரண்டும் பிரிக்கப்படுகின்றன. பின், விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு, இதன் விவரங்களை, &'ஸ்கேன்&' செய்வது உள்ளிட்ட பல்வேறு பணிகள் தொடர்ந்து நடைபெற உள்ளன.
ஜூன் 3ம் தேதி நடக்கும் தேர்வு தள்ளிப்போகும் என ஏற்கனவே தகவல் வெளியாகி உள்ள நிலையில், இதுகுறித்த அறிவிப்பை பள்ளிக்கல்வி மானியக் கோரிக்கையில் எதிர்பார்க்கலாம். தேர்வு தள்ளி வைக்கப்படாத பட்சத்தில், மே மூன்றாவது வாரத்தில் இருந்து, ஹால் டிக்கெட் அனுப்பும் பணி நடைபெறும்.