முப்பருவத்தேர்வு முறை குறித்து ஆசிரியர்களுக்கு இரண்டு கட்ட பயிற்சி அளிக்கப்படுகிறது. தமிழகத்தில் வரும் கல்வி ஆண்டு முதல் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை முப்பருவத்தேர்வு முறை நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தில் மாணவர்களின் பாடச்சுமை குறைக்கப்படுகிறது. ஒரு பருவத்திற்கான அனைத்து பாடங்களும் ஒரே புத்தகமாக தயாரிக்கப்படுகிறது. ஜூன்-செப்டம்பர் வரை முதல் பருவம். அக்டோபர்-டிசம்பர் வரை இரண்டாம் பருவம். ஜனவரி-ஏப்ரல் மூன்றாம் பருவமாகவும் பாடத்திட்டங்கள் தயாரிக்கப்படுகின்றன. இக்கல்வி முறையில் மாணவர்களின் தனித்திறன்களை மேம்படுத்தவும், சிந்திக்கும் திறனை வளர்க்கவும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.