தமிழக அரசு பள்ளிகளின் சீருடை நிறம் மாறுகிறது.
தமிழக அரசுப் பள்ளி மாணவர்களின் சீருடை நிறம் மாற்றப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசுப் பள்ளிகளில், பொதுவாக, மாணவர்களுக்கு, காக்கி நிற கால் சட்டையும், வெள்ளை நிற மேல் சட்டையும், மாணவிகளுக்கு, கீழாடையாக நீல நிறத்திலும், மேலாடையாக வெள்ளை நிறத்திலும் தற்போது வரை இருந்துவருகின்றன.
ஆனால், சில பள்ளிகளில் சீருடைகள் வேறு நிறத்தில் இருந்தன. எனவே, அனைத்து அரசுப் பள்ளிகளிலும், ஒரேமாதிரியான நிறத்தில் சீருடை வழங்கவும், (கல்ப் ரெட் கீழாடை மற்றும் வெள்ளை நிற மேலாடை என தமிழக அரசு பள்ளிகளின் சீருடை நிறம் மற்றபடலம் என செய்தி தாள்களின் ஊக செய்திகள் தெரிவிக்கின்றன). மேலும் விலையில்லாமல் வழங்கப்படும் ஒரு ஜோடி சீருடைக்குப் பதிலாக 4 ஜோடி சீருடைகள் வரும் கல்வியாண்டு முதல் வழங்கப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதன்பொருட்டு, சீருடைகள் உற்பத்திக்காக ரூ.368 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்த கல்வியாண்டில், பள்ளிகள் திறந்தவுடன், மாணவ-மாணவிகளுக்கு சீருடை வழங்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்ப் ரெட் கீழாடை மற்றும் வெள்ளை நிற மேலாடை என தமிழக அரசு பள்ளிகளின் சீருடை நிறம் மாறுகிறதா?
கல்ப் ரெட் நிறம் என்பது தற்போது தமிழகம் எங்கும் அரசால் வழங்கப்பட்டு வரும் இலவச சைக்கிளின் நிறம் ஆகும்.