"நேத்ரோதயா' அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்ட இந்த சி.டி.க்கள் 300 பேருக்கு இலவசமாக வழங்கப்பட்டது.
இது குறித்து "நேத்ரோதயா'வின் நிறுவனர் சி.கோவிந்தகிருஷ்ணன் கூறியது:
அரசுப் பள்ளி ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்க போட்டித் தேர்வும், தகுதித் தேர்வும் இந்த ஆண்டு நடைபெற உள்ளன. இத்தேர்வுகளில் பங்கேற்க சாதாரண மாணவர்களுக்கு பயிற்சி மையங்களும், வழிகாட்டி கையேடுகளும் ஏராளமாக உள்ளன. ஆனால், பார்வைத்திறன் குறைந்த மாற்றுத் திறனாளிகளுக்கு எந்தவிதமானப் புத்தகங்களும் இல்லை.
இதையடுத்து, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள பாடத்திட்டம் குறித்த தகவல்கள் அடங்கிய 100 மணி நேரம் ஓடக்கூடிய ஆடியோ சி.டி.யை தயாரித்துள்ளோம்.
மாற்றுத் திறனாளிகள் உரிய முறையில் பயிற்சி பெற்று, தங்களுக்கான இடஒதுக்கீட்டைப் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் இதை நாங்கள் வெளியிட்டுள்ளோம். சி.டி. தேவைப்படுவோர், அதை இலவசமாகப் பெற "நேத்ரோதயா' அமைப்பை 044-26530712 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம் என்றார் கோவிந்தகிருஷ்ணன்.
மாற்றுத் திறனாளிகளுக்காக பாடுபட்டுவரும் "நேத்ரோதயா' அமைப்பு, கிராமப்புறங்களில் இருந்துவரும் பார்வைத்திறன் குறைந்த மாணவர்கள் இலவசமாக தங்கிப் படிக்க உதவி வருகிறது.