Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Padasalai.Net's - "மலரும் மொட்டுகள் திட்டம்" For Free NEET Exam Coaching





அன்புள்ள பாடசாலை வாசகர்களே,


      வணக்கம். நமது பாடசாலை வலைத்தளம் தமிழகம் முழுவதும் பல கிளைகளைக் கொண்ட, தமிழகத்தின் முன்னணி NEET Coaching Centre ஆன CE Academy நிறுவனத்துடன் நமது அரசு பள்ளி மாணவர்களுக்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு உள்ளது.



        இதன்படி நமது தமிழகத்தின் அரசு பள்ளியை சேர்ந்த, தற்போது 12 ஆம் வகுப்பு படித்து கொண்டிருக்கும் 5 மாணவ, மாணவிகளை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு NEET Exam Crash Course பயிற்சி இலவசமாக வழங்கப்படும்.




பயிற்சி விவரம்:

Course Name: NEET Exam Crash Course 2018
Period: 1 Month
Time: 18 Hours
Place: CE Academy Centre, Chennai

மாணவர்கள் பதிவு செய்யும் முறை:

        நமது பாடசாலை வலைத்தளத்தில் வழங்கியுள்ள NEET Students - Registration Form - ல் மாணவர்களோ அல்லது ஆர்வமுள்ள மாணவர்களின் சார்பாக ஆசிரியர்களோ படிவத்தில் கேட்கப்படும் விவரங்களை பதிவு செய்ய வேண்டும். 

மாணவர்கள் தேர்ந்தேடுக்கப்படும் முறை:

       பதிவு செய்துள்ள மாணவர்களின் Email Id மற்றும் Cell Number மூலமாக நமது பாடசாலை வலைத்தளத்தினர் தொடர்பு கொண்டு "மாணவர்கள் வழங்கியுள்ள விவரங்களின் உண்மை தன்மை" மற்றும் "மருத்துவர் ஆக வேண்டும் என்ற மாணவர்களின் தணியாத ஆர்வம்" முதலியவற்றை சோதித்து அறிந்தபின் தேர்ந்து எடுக்கப்பட்ட மாணவர்களின் இறுதி பட்டியல் வெளியிடப்படும். 

எவையெல்லாம் இலவசம்?

        மேலும் அரசு பள்ளி மாணவர்களுக்காக Course Fees, Full Set Study Materials, உணவு, உடை, இருப்பிடம் போன்ற அனைத்தும் தேர்ந்து எடுக்கப்படும் 5 மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும்.

இப்பயிற்சியில் சேர அடிப்படை தகுதி என்ன?

1. பதிவு செய்யும் மாணவ, மாணவிகள் தற்போது அரசு பள்ளி அல்லது அரசு நிதி உதவி பெரும் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து கொண்டிருக்க வேண்டும்.
2. மருத்துவர் ஆக வேண்டும் என்ற லட்சியம் வேண்டும். 

     அரசு மற்றும் அரசு நிதி உதவி பெரும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்காக உணவு, உடை, இருப்பிட வசதியுடன் தரமான கல்வியை இலவசமாக வழங்க வேண்டும் என நமது பாடசாலை வலைத்தளம் இந்நிறுவனத்தை அணுகியவுடன் மிக ஆர்வமாக ஒப்புக்கொண்டு முழு ஒத்துழைப்பு வழங்கி வரும் இந்நிறுவனத்தின் Academic Director திரு.ராமச்சந்திரன் அவர்களுக்கு நன்றி தெரிவித்த்து கொள்கிறோம். மேலும் தற்போது வரை NEET Exam-க்காக Onlineஇல் பதிவு செய்வது குறித்து எழும் சந்தேகளுக்கு உடனடியாக விடையளிக்கவும் தயாராக உள்ளதாக ஐயா கூறியுள்ளதற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.

NEET Exam 2018 - Online Apply Regards Doubts - Call to this contact number: 96000 46499

அன்புள்ள ஆசிரியர்களே,

     அரசு பள்ளி மாணவர்களுக்காக நமது பாடசாலை வலைத்தளம் மேற்கொண்ட உள்ள இம்முயற்சியில் தமிழகம் எங்கும் உள்ள, தங்கள் பள்ளியை சேர்ந்த ஆர்வமுள்ள மாணவர்களிடம் இந்த திட்டம் குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தி, அவர்களின் விவரங்களை அவர்கள் சார்பாக பதிவு செய்து உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி!
அன்புடன் பாடசாலை

























4 Comments:

  1. நல்ல திட்டம் வாழ்த்துக்கள்.ஐந்து மாணவர்கள் என்ற எண்ணிக்கையை அதிகரித்தால் மற்ற மாணவர்களும் பயன் பெறுவார்களே

    ReplyDelete
  2. is this scheme is not for matric school student.my aim is to study MBBS.i'm from a middle class family.... plz guide me sir...it is my childhood dream..

    ReplyDelete
  3. ஐந்து மாணவர்கள் என்ற இடத்தில் ஐம்பது மாணவர்கள் படிக்கலாமே

    ReplyDelete
  4. This scheme is good for middle class students to achieve their goal.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive