அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் சம்பள உயர்வுக்கான அரசாணை இன்று மாலை
வெளியிடப்படும் என்றும் இந்த ஊதிய உயர்வு இன்னும் 2 நாட்களில்
அமல்படுத்தப்படும் என்று தெரிகிறது.
சென்னை: 7-ஆவது
ஊதியக் குழு பரிந்துரையை தமிழக அரசு ஏற்றுக் கொண்டுள்ளதால் அரசு ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியம் 20% உயர்கிறது. கடந்த சில நாள்களுக்கு முன்பு 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்தக் கோரி அரசு ஊழியர்கள்- ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ அமைப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கடும் கண்டனம் தெரிவித்தார்.
இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் 7-ஆவது ஊதிய குழு பரிந்துரைகளை அக். 13-ஆம் தேதிக்குள் அமல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான 7-வது ஊதியக்குழு பரிந்துரைகள் குறித்து அமைக்கப்பட்ட வல்லுனர் குழுவின் அறிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது. இதையடுத்து 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைகளை ஏற்க அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டது. இதனால் அரசு ஊழியர்களின் அடிப்படை ஊதியம் 20 சதவீதம் வரை உயருகிறது. இதுதொடர்பாக இன்று மாலை அரசாணை வெளியிடப்படும் என்றும் இந்த ஊதிய உயர்வு இன்னும் 2 நாட்களில் அமல்படுத்தப்படும் என்று தெரிகிறது.
Anon mam....
ReplyDeleteWtg g.o. varumaa??????
Paper 2 posting apdate pannunga???? Pls
Onum puriyala....