Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

A Trend Setter - Padasalai's Centum Coaching Team (2016) - Back Again!


அன்புள்ள ஆசிரியர்களே & மாணவர்களே,


             வணக்கம். ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பயனுள்ள பல்வேறு புதுமையான சேவைகளை வழங்கி வரும் நமது பாடசாலை வலைதளம் மேலும் ஒரு புதிய முயற்சியாக, தமிழகம் முழுவதும் உள்ள திறமையான ஆசிரியர்களை ஒருங்கிணைத்து 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 100 சதவீதம் மதிப்பெண்கள் பெறுவது குறித்து இலவசமாக சிறப்பு ஆலோசனைகள் மற்றும் பயிற்சிகள் வழங்கி வருகிறோம்.


            தமிழகம் முழுவதும் உள்ள ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பேராதரவு பெற்ற "பாடசாலையின் Centum Coaching Team" - மூன்றாவது ஆண்டாக வெற்றிகரமான இச்சேவையை மீண்டும் வழங்குவதில் பெருமிதம் கொள்கிறோம்.

இக்குழுவில் இணைய ஆசிரியர்கள் செய்ய வேண்டியது என்ன?

  1. Click Here & Enter Your Details (Teachers Only)
  2. மேலே தரப்பட்டுள்ள படிவத்தில் தங்கள் விவரங்களை பதிவு செய்ய வேண்டும். 
  3. பிறகு பாடசாலை வலைதளத்திற்கென பிரத்யேகமான தாங்களே தயார் செய்த வினாத்தாளை நமது இமெயில் ஐடிக்கு (Email ID: padasalai.net@gmail.com) அனுப்பி வைக்க வேண்டும். (வினாத்தாள் Public Exam முறையில் கடினமாக, எதிர்பார்க்கப்படும் வினாக்களைக் உள்ளடக்கி, நுணுக்கமாக தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும்,  Word Format  ல் [With Font] வினாத்தாள் இருக்கலாம்).
  4. தமிழகம் முழுவதும் உள்ள மீத்திறன் மிகுந்த மாணவர்கள் மட்டுமே இத்தேர்வினை எழுத இருப்பதால் வினாத்தாள் மிகுந்த கடினமாக தயாரிக்கப்படவேண்டும்.
  5. நீங்கள் அனுப்பக்கூடிய வினாத்தாள் பாடசாலை வலைதளத்தில் சிறப்பு பயிற்சி பகுதியில் வெளியிடப்படும்.
  6. அவ்வினாத்தாளுக்கு மாணவர்கள், தங்கள் வீட்டிலேயே தேர்வு எழுதி அவ்விடைத்தாளினை தாங்கள் வழங்கக்கூடிய தங்கள் தொடர்பு முகவரிக்கு அனுப்பி வைப்பர். 
  7. அவ்விடைத்தாளினை கேள்வித்தாள் தயாரித்த உரிய ஆசிரியர் முழுமையாக திருத்த வேண்டும். மேலும் எந்தெந்த முறையில் 100 சதவீத மதிப்பெண் பெறுவதில் இழப்பீடு ஏற்பட்டுள்ளது? 100 சதவீதம் பெற தங்களின் ஆலோசனைகளையும் விடைத்தாளிலேயே சிவப்பு மையினால் குறித்திருக்க வேண்டும். 
  8. பிறகு மாணவர்கள் அனுப்பியிருக்கும் ஸ்டாம்ப் ஒட்டப்பட்ட Return Cover -ல் அவ்விடைத்தாளை வைத்து Post செய்திட வேண்டும். இதனால் மாணவர்கள் பொதுத்தேர்வில் 100 சதவீத மதிப்பெண் பெற இயலும். தொண்டுள்ளத்துடன் நன்கு படிக்கக்கூடிய ஏழை மாணவர்களுக்காக உதவ இருக்கும் ஆசிரியர்களாகிய தங்களை பாடசாலை வாழ்த்தி வரவேற்கிறது.
 மாணவர்கள் செய்ய வேண்டியது என்ன?
  1. Click Here & Enter Your Details (Students Only)
  2. இங்கு வழங்கப்படும் சிறப்பு வினாத்தாளை பிரிண்ட் எடுத்து விடுமுறை நாட்களில் முழுமையான, முறையான தேர்வு எழுதி வினாத்தாள் தயாரித்து வழங்கிய ஆசிரியருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
  3. A4 Size (Or) Legal Size உள்ள துணிக்கவர்கள் இரண்டு வாங்கிக்கொள்ள வேண்டும். ஒரு தாளில் வினாத்தாள் தயாரித்த ஆசிரியர் முகவரியை ”பெறுநர்” பகுதியில் குறிப்பிட்டு அதில் தங்கள் விடைத்தாளை வைக்க வேண்டும்.
  4. மற்றோரு கவரில்  மாணவர்கள் தங்கள் சுயமுகவரியை ”பெறுநர்” எனும் இடத்தில் எழுதி அதற்கு உரிய அளவில் ஸ்டாம்ப்களையும் ஒட்டிய பிறகு, அக்கவரையும் விடைத்தாள் எழுதி அனுப்பும் கவருக்குள்ளேயே வைத்து அனுப்ப வேண்டும்.
  5. ஆசிரியர்கள் தங்கள் விடைத்தாளை திருத்திய பிறகு தங்கள் சுயவிலாசமிட்ட கவரில் வைத்து தங்களுக்கு விரைவில் திருப்பி அனுப்புவார்.
  6. Slow Learners மீது மட்டும் கவனம் செலுத்தாமல் மீத்திறன் மிகுந்த மாணவர்களுக்கும் உதவும் நோக்கில், மாணவர்களின் நலன் கருதி, இச்சேவையில் தங்களை இணைத்துக்கொண்டுள்ள பாடசாலை ஆசிரியர் குழுவினை, மாணவர்கள் மிகுந்த பணிவுடன் தொடர்பு கொண்டு திருத்தப்பட்ட விடைத்தாள் குறித்த தங்கள் சந்தேகங்களையும், ஆலோசனைகளையும் அலைபேசி மூலமாக பெறலாம்.
  7. முக்கியக் குறிப்பு 1 - ஒரு கவரில் அதிகபட்சம் மூன்று மாணவர்களின் விடைத்தாள்கள் மட்டுமே வைக்கப்பட்டிருக்க வேண்டும். அதற்கு மேல் வைத்து அனுப்பினால் இச்சேவையில் இணைந்துள்ள ஆசிரியருக்கு வேலை பளு அதிகரிக்கும் என்பதால் அவர்களுக்கான விடைத்தாள்கள் திருத்தப்பட்டு அனுப்பப்படாது என உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
  8. முக்கியக் குறிப்பு 2 - கடந்த வருடங்களில் வழங்கப்பட்ட வினாத்தாள்களை மாணவர்கள் Print எடுத்து படிக்கலாமே தவிர, அதற்க்கான விடைத்தாளை உரிய ஆசிரியருக்கு அனுப்பி வைக்க வேண்டாம் [Its Reference Purpose Only]. அவ்வாறு அனுப்பினாலும் அவை திருத்தி வழங்கப்படாது.  இந்த வருடத்தில் நாம் வழங்கக்கூடிய வினாத்தாள்களுக்கு மட்டுமே விடைத்தாள்கள் திருத்தி வழங்கப்படும்.




என்றும் ஆசிரியர் - மாணவர் சேவையில்,

அன்புடன் - பாடசாலை ஆசிரியர்கள் குழு.




15 Comments:

  1. I already registered with Padasalai. But I didn;t get the URL link. After registration, showed in the monitor URL will be sent to u. I din't get it. Please send me the same

    S. Bhargavi
    +2 English medium
    9840743109

    ReplyDelete
  2. Please help me, how to send posts to teachers because it's a hard way to understand your sayings.So I need you guys to help me out with easy way. please look over my concerns.
    Siddarth.G
    Class 12
    8778849490

    ReplyDelete
  3. this website is very use full!!!

    ReplyDelete
  4. Very useful site.thank you so much

    ReplyDelete
  5. how to score centum in 10 standard

    ReplyDelete
    Replies
    1. Previous year question papers will help you for the present year!!

      Delete
  6. THIS WEBSITE IS USEFUL FOR WHO ACHIEVE CENTUM IN THEIR EXAMS. HEARTFUL THANKS TO ALL TEACHERS WHO ARE UPLOADED QUESTION PAPERS.

    ReplyDelete
  7. Super website for imporove our education

    ReplyDelete
  8. How to centum 12th std please help

    ReplyDelete
  9. I need thothukodi district 10 revision timetable pls

    ReplyDelete
  10. I registered i didnt got any respond

    ReplyDelete
  11. தாங்கள் ஏற்கெனவே மதிப்பீடு செய்த சிறந்த விடைத்தாள்களை வெளியிட்டால் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. ya.. I want question paper I write exam,please give question paper.

      Delete
  12. How to register in padasallai

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive