Home »
» ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம்.
பள்ளி ஆசிரியர்களுக்கான பணிப் பாதுகாப்பு சட்டத்தை ஏற்படுத்த வேண்டும்,' என
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தியது.
மதுரையில் இதன் பொதுக் குழுக் கூட்டம் மாநில தலைவர் இளங்கோவன் தலைமையில்
நடந்தது.
மாநில அமைப்பு செயலாளர் நாகசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.
மாவட்ட செயலாளர் முருகன் வரவேற்றார்.ஆசிரியர்கள் மீது அடிக்கடி தாக்குதல்
சம்பவங்கள் நடக்கின்றன. அவர்களுக்கு பணிப்பாதுகாப்பு சட்டத்தை அரசு
ஏற்படுத்த வேண்டும். சென்னையில் ஆசிரியரை தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்க
வேண்டும் போன்ற தீர்மானங்கள் இதில் நிறைவேற்றப்பட்டன.உயர்நிலை மேல்நிலை
பள்ளி தலைமையாசிரியர் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கரன் கூறுகையில்
''சென்னையில் ஆசிரியர் தாக்குதலுக்குள்ளானது கண்டிக்கத்தக்கது,'' என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...