Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Padasalai's - Centum Coaching Team (2015) - Back Again!

அன்புள்ள ஆசிரியர்களே & மாணவர்களே,



             வணக்கம். ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பயனுள்ள பல்வேறு புதுமையான சேவைகளை வழங்கி வரும் நமது பாடசாலை வலைதளம் மேலும் ஒரு புதிய முயற்சியாக, தமிழகம் முழுவதும் உள்ள திறமையான ஆசிரியர்களை ஒருங்கிணைத்து 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 100 சதவீதம் மதிப்பெண்கள் பெறுவது குறித்து இலவசமாக சிறப்பு ஆலோசனைகள் மற்றும் பயிற்சிகள் வழங்க உள்ளது.

இக்குழுவில் இணைய ஆசிரியர்கள் செய்ய வேண்டியது என்ன?

  1. Click Here & Enter Your Details (Teachers Only)
  2. மேலே தரப்பட்டுள்ள படிவத்தில் தங்கள் விவரங்களை பதிவு செய்ய வேண்டும். 
  3. பிறகு பாடசாலை வலைதளத்திற்கென பிரத்யேகமான தாங்களே தயார் செய்த வினாத்தாளை நமது இமெயில் ஐடிக்கு (Email ID: padasalai.net@gmail.com) அனுப்பி வைக்க வேண்டும். (வினாத்தாள் Public Exam முறையில் கடினமாக, எதிர்பார்க்கப்படும் வினாக்களைக் உள்ளடக்கி, நுணுக்கமாக தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும்,  Word Format  ல் அல்லது PDF Format ல் வினாத்தாள் இருக்கலாம்).
  4. தமிழகம் முழுவதும் உள்ள மீத்திறன் மிகுந்த மாணவர்கள் மட்டுமே இத்தேர்வினை எழுத இருப்பதால் வினாத்தாள் மிகுந்த கடினமாக தயாரிக்கப்படவேண்டும்.
  5. நீங்கள் அனுப்பக்கூடிய வினாத்தாள் பாடசாலை வலைதளத்தில் சிறப்பு பயிற்சி பகுதியில் வெளியிடப்படும்.
  6. அவ்வினாத்தாளுக்கு மாணவர்கள், தங்கள் வீட்டிலேயே தேர்வு எழுதி அவ்விடைத்தாளினை தாங்கள் வழங்கக்கூடிய தங்கள் தொடர்பு முகவரிக்கு அனுப்பி வைப்பர். 
  7. அவ்விடைத்தாளினை கேள்வித்தாள் தயாரித்த உரிய ஆசிரியர் முழுமையாக திருத்த வேண்டும். மேலும் எந்தெந்த முறையில் 100 சதவீத மதிப்பெண் பெறுவதில் இழப்பீடு ஏற்பட்டுள்ளது? 100 சதவீதம் பெற தங்களின் ஆலோசனைகளையும் விடைத்தாளிலேயே சிவப்பு மையினால் குறித்திருக்க வேண்டும். 
  8. பிறகு மாணவர்கள் அனுப்பியிருக்கும் ஸ்டாம்ப் ஒட்டப்பட்ட Return Cover -ல் அவ்விடைத்தாளை வைத்து Post செய்திட வேண்டும். இதனால் மாணவர்கள் பொதுத்தேர்வில் 100 சதவீத மதிப்பெண் பெற இயலும். தொண்டுள்ளத்துடன் நன்கு படிக்கக்கூடிய ஏழை மாணவர்களுக்காக உதவ இருக்கும் ஆசிரியர்களாகிய தங்களை பாடசாலை வாழ்த்தி வரவேற்கிறது.
 மாணவர்கள் செய்ய வேண்டியது என்ன?
  1. Click Here & Enter Your Details (Students Only)
  2. இங்கு வழங்கப்படும் சிறப்பு வினாத்தாளை பிரிண்ட் எடுத்து விடுமுறை நாட்களில் முழுமையான, முறையான தேர்வு எழுதி வினாத்தாள் தயாரித்து வழங்கிய ஆசிரியருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
  3. A4 Size (Or) Legal Size உள்ள துணிக்கவர்கள் இரண்டு வாங்கிக்கொள்ள வேண்டும். ஒரு தாளில் வினாத்தாள் தயாரித்த ஆசிரியர் முகவரியை ”பெறுநர்” பகுதியில் குறிப்பிட்டு அதில் தங்கள் விடைத்தாளை வைக்க வேண்டும்.
  4. மற்றோரு கவரில்  மாணவர்கள் தங்கள் சுயமுகவரியை ”பெறுநர்” எனும் இடத்தில் எழுதி அதற்கு உரிய அளவில் ஸ்டாம்ப்களையும் ஒட்டிய பிறகு, அக்கவரையும் விடைத்தாள் எழுதி அனுப்பும் கவருக்குள்ளேயே வைத்து அனுப்ப வேண்டும்.
  5. ஆசிரியர்கள் தங்கள் விடைத்தாளை திருத்திய பிறகு தங்கள் சுயவிலாசமிட்ட கவரில் வைத்து தங்களுக்கு விரைவில் திருப்பி அனுப்புவார்.
  6. Slow Learners மீது மட்டும் கவனம் செலுத்தாமல் மீத்திறன் மிகுந்த மாணவர்களுக்கும் உதவும் நோக்கில், மாணவர்களின் நலன் கருதி, இச்சேவையில் தங்களை இணைத்துக்கொண்டுள்ள பாடசாலை ஆசிரியர் குழுவினை, மாணவர்கள் மிகுந்த பணிவுடன் தொடர்பு கொண்டு திருத்தப்பட்ட விடைத்தாள் குறித்த தங்கள் சந்தேகங்களையும், ஆலோசனைகளையும் அலைபேசி மூலமாக பெறலாம்.
  7. முக்கியக் குறிப்பு - ஒரு கவரில் அதிகபட்சம் மூன்று மாணவர்களின் விடைத்தாள்கள் மட்டுமே வைக்கப்பட்டிருக்க வேண்டும். அதற்கு மேல் வைத்து அனுப்பினால் இச்சேவையில் இணைந்துள்ள ஆசிரியருக்கு வேலை பளு அதிகரிக்கும் என்பதால் அவர்களுக்கான விடைத்தாள்கள் திருத்தப்பட்டு அனுப்பப்படாது என உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.




என்றும் ஆசிரியர் - மாணவர் சேவையில்,

அன்புடன் - பாடசாலை.




24 Comments:

  1. பாடசாலைக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும். அனைத்து மீத்திறன் மாணவர்களுக்கும் நல்ல வழிகாட்டுதல்.

    ReplyDelete
  2. Dear sir,
    It is very use full for above 90% marks getting students. Thanks a lot.

    ReplyDelete
  3. மீத்திறன் கொண்ட மாணவர்களுக்கு தாங்கள் எடுத்துள்ள முயற்சிக்கு பாராட்டு கலந்த வாழ்த்துக்கள். 200 க்கு 200 எடுப்பதில் இருக்கும் சிரமங்களைக் களைந்து அதற்கான சிறப்ஙப வழிகாட்டுதலை மாணவர்களுக்கு அளித்திட இருக்கும் பொதுநலச் செம்மல் தமிழ்ச்செல்வனின் நல்லுள்ளத்திற்கு எனது வாழ்த்துக்கள். இது பாடசாலை வலைத்தளத்திற்கு ஒரு மகுடம். நன்றி. சி.கோபாலகிருஷ்ணன். பாலப்பட்டி

    ReplyDelete
  4. very good effort. valga valamudan

    ReplyDelete
  5. thank you sir.

    ReplyDelete
  6. DR.D.RADHIKA2/23/2015 7:02 pm

    it is a great effort hats off to the entire padasalai team and its co ordinator.the valuations are prompt and quick the teachers are very helpful also

    ReplyDelete
  7. Very Good Effort.... it will be very useful to the students.... thank you

    ReplyDelete
  8. It is very much useful to Bright learners and also Teachers. In this qstnpaper paper will determined students public examination mark,also fulfilled the teacher's expectation. thank you very much. C.SANTHANAKUMAR,PGT-BIOLOGY.

    ReplyDelete
  9. Dear teachers I have one doubt in 10std science text book questions. Can you say answer key for following questions Lesson 4 . Reproduction in plants
    PART C question no. 16 iii) fleshy structure storing food for the embryo.......
    Lesson 7. Conservation of environment PART B
    question no. 8. ii) find out how many food chains are present in the above food web. .........

    ReplyDelete
  10. டெட் தேர்ச்சி பெற்ற , பி.எட் படித்த மற்றும் படித்துகொண்டிருக்கிற நண்பர்களுக்கு வணக்கம், தமிழ்நாட்டின் பிறப்பு விகிதம் வெகுவாக குறைந்துள்ளது . 15 ஆண்டுகளுக்கு முன் ஒரு தம்பதினர் 3 -4 குழந்தை பெற்று கொண்டனர். ஆனால் தற்போது 1 -2 குழந்தை பெற்று கொள்கின்றனர்.
    15 ஆண்டுகளுக்கு முன் ஒரு மாவட்டத்தில் 10 -15 தனியார் மெட்ரிக் பள்ளிகள் இருந்தன . ஆனால் தற்போது மாவட்டத்திற்கு 100 - 150 தனியார் மெட்ரிக் பள்ளிகள் இருக்கின்றன. மக்களிடமும் தனியார் பள்ளி மோகம் தன அதிகம் உள்ளது.

    இந்த கல்வியாண்டின் நிலவரப்படி இடை நிலை ஆசிரியர்களில் 23.7 % மும் பட்டதாரி ஆசிரியர்களில் 16.23% மும் முது நிலை பட்டதாரி ஆசிரியர்களில் 4.8% மும் உபரி ஆசிரியர்களும் உள்ளனர். இது தன உண்மை நிலவரம்.

    எனவே, ஆசிரியர் பனி வருமா? TRB வருமா? TET வருமா ? என எதிர் பார்க்க வேண்டாம். தயவு செய்து இனியும் பி. எட் படித்து வாழ்க்கையை வினாக்க வேண்டாம் . படித்து முடித்தவர்களுக்கும் திருமண அழைபிதழில் போடா மட்டுமே உதவும்.

    இங்கு குறிப்பிடப்பட்ட புள்ளி விவரங்கள் அனைத்தும் மிக சரியானவை.

    ReplyDelete
    Replies
    1. தம்பி எங்கையோ செமத்தியா வாங்கிரிகீங்கபோல 🤣🤣🤣🤣

      Delete
  11. very usuful for studants
    so thankyou your team

    ReplyDelete
  12. நல்ல முயற்சி வாழ்த்துகள்

    ReplyDelete
  13. GOOD EFFORT;MORE USEFUL TO BRIGHT STUDENTS.BUT THERE IS NO QN PAPERS FOR MATHS,SOCIAL&ENG.I PAPER.PLEASE UPLOAD THAT TOO....

    ReplyDelete
  14. I want more and more tamil medium Chemistry questions. My no 8144870086

    ReplyDelete
  15. It is useful both students and teachers .so once again thank you ..

    ReplyDelete
  16. It is useful both students and teachers .so once again thank you ..

    ReplyDelete
  17. i want more and more book inside 1mark questions

    ReplyDelete
  18. Edarku katanam unda..?

    ReplyDelete
    Replies
    1. NOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO

      Delete
  19. IS THERE MORE QUESTIONS FOR ONE MARK QUESTIONS INSIDE BOOK??????????

    ReplyDelete
  20. I have already learnt in padasalai for my 10th std.I worked out all the question papers published by the team.I'm really thankful to you.I scored 97 in english,99 in science,100 in social.thankyou so much. I need all your help for my upcoming 12th std.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive